இதனால் அடுத்த சில வருடத்தில் இந்திய ஐடி நிறுவனங்கள் மத்தியில் கிளவுட் சேவை சார்ந்த வர்த்தகத்தையும், லாபத்தைத் தனிப்பட்ட முறையில் கவனிக்க வேண்டிய நிலை உருவாகும். இன்றைய நிலையில் இந்திய ஐடி நிறுவனங்களுக்கு அதிகளவிலான வர்த்தகம் மற்றும் வருமானத்தைத் தருவது BFSI பிரிவு என்பது குறிப்பிடத்தக்கது
5 பிரிவுகளாக உடையும் டிசிஎஸ்
இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான டிசிஎஸ் தனது மொத்த கவனத்தையும் கிளவுட் சேவையை விரிவாக்கும் திட்டத்தில் செலுத்தி வருகிறது, அடுத்த சில வருடத்தில் தற்போது பெறும் கிளவுட் சேவை வர்த்தகத்தை இரட்டிப்பாக்க வேண்டும் எனத் திட்டமிட்டு அதற்கான பணிகளை வேகமாகச் செய்து வருகிறது.ஒட்டுமொத்த டெக் உலகமும் கிளவுட் சேவையை நோக்கிப் பயணித்து வரும் நிலையில், டிசிஎஸ் இத்துறை சார்ந்த வர்த்தகத்தை மற்ற இந்திய நிறுவனங்களை விடவும் அதிகளவில் பெற வேண்டும் என்பதற்காகக் கிளவுட் சேவைக்கென பிரத்தியேக குழுவை உருவாக்கத் திட்டமிட்டு, அதற்கான பணியில் இறங்கியுள்ளது டிசிஎஸ்.
0 Comments